Wednesday, November 23, 2005

என் இனிய கிரமத்து மக்களே!!!







தீபாவளிக்கு 2 நாளைக்கு முன், ஆஃபிஸில் இருந்து கிளம்பும் போது நேரம் சரியாக 12:40. "ஆட்டோ பரத்தா? ", கேட்டது தான் தெரியும் சர்ர்ர்ர், ட்ராவெல்ஸ் வந்து சேர்ந்தான் புண்ணியவான். நன்றி தலைவா சொல்லிவிட்டு திரும்பிய எனக்கு, எனக்கே உறிய பானியில் ஆப்பு! சேலம் பஸ் புறப்பட்டு சென்றது. "பாஸ், இப்போ தானே ஃபோன் பன்னினேன், அதை நிருத்தாம போய்டீங்களே". "சார் , அடுத்த பஸ் இன்னும் அரை மணி நேரத்தில் இருக்கு அதுல போங்க" என்று சளைப்புடன் சொல்லிவிட்டு போனான் டிராவல்ஸ் ஆசாமி.

பஸ் வந்தது, என்னை வழி அனுப்பிவைத்தது மிஸ்டர்.ஆப்பு MBBS. நீ முன்னலே போனா நான் பின்னலே வாரேன்... பாட்டு பாடி. நல்ல தூக்கம், அதை கெடுத்தது எரிச்சலூட்டும் காற்று ஒலிப்பான் (அதை என்ன்னைக்கு தான் ஒளிப்பானுகளோ). அறைக்கண் திரந்தேன். 1 மணி நேரம் அங்கேயே நின்றது பஸ். சரி , இன்று 1 மணி நேரம் லேட் என்று முடிவெடுத்தேன். ஒரு வழியாக வண்டி தருமபுரியை தான்டும் போது ரெண்டு படம் பார்த்தாச்சு. சரி, லேட் ஆனாலும் லேட்டஸ்டா படம் பாத்தச்சுன்னு பெருமூச்சி விடுமுன் தடால் என சத்தம். ஹா ஹா ஹா, பக்கத்தில் இருந்து சிரிக்கிறார் நம் அண்ணாச்சி, மிஸ்டர் ஆப்பு. பட்ட புன்னுலயே படும், வச்ச ஆப்பே வைக்கும்னு சொன்னா மாதரி, அப்புறம் என்ன, சேலம் போகும்போது மணி 10. கடைசி பஸ்சும் சுவாஹா! அங்கேயே லாட்ஜ் போட்டேன்.

காலை 5.10 க்கு முதல் வண்டி, ஏரி உக்காந்தேன், அதுலயும் படம், டபுள் ஸ்கரீனில். நமது பாரதிராஜா கறம் கூப்பி சொன்னார் "என் இனிய கிராமத்து மக்களே".... ஆஹா, அருமை அருமை. "சாமி, எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாகனும் " " நீதான அந்தகுயில்" வசனம் பாட்டு, எல்லம் சூப்பர். ஒரு வழியாக வண்டி யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் வைரிசெட்டிப்பாளையம் வந்து தரை தொட்டது. ஊருக்குள் கூட்டிச்செல்ல தோனியில் ராதாவின் வரவை எதிர்பார்த்து நின்றேன். மாறாக, wireless விஜய் அங்கு, 'நம்ம ஊரு வண்டியில்' வந்தான். சுதாரித்து கொன்ட நான், ஆஹா, சிவாஜி நம்மள பாதிசிட்டான் டோய்னு நினைத்தேன்.

கிராமம், மக்களின் அண்பு, வெகுளித்தனம், நட்பு, எல்லாம் என்னை பொறாமைப்பட வைத்தது. அழகான கிராமம், அமைப்பான வீடு, அண்பான மக்கள், அடர்ந்த நிம்மதி... இவை எல்லம் பார்க்கும் போது, வாழ்வின் எல்லைகோட்டை எட்டிப்பிடிக்கும் வயதில், அப்படி ஒரு இடததில் தான் தலை சாய்த்து கண் மூடவேண்டும் என்று மனதில் தோன்றியது. சற்று அளவாக, ஒரு 4 இட்லி, தோசை, அடை, லட்டு, முறுக்கு (இது தான் அளவு) உனவுக்குளாய் வரை உள்ளே தள்ளிவிட்டு, கிளம்பினோம் மலையை நோக்கி. இரண்டு புறமும் பச்சை நிறமே, பச்சை நிறமே.... புளியாஞ்சோலை எங்களை அண்புடன் வரவேற்றது.

ஒற்றை அடி பாதை வழியாக ஊர்கோலம் சென்றோம். வழியில் பல தடைகள், ராமர் அன்று லங்கை செல்லும் முன் எதிர்கொன்டதை விட அதிகம். Mountain Dew விளம்பரத்தில் வருவதைப்போல, மலை ஆட்டுடன் ஒரு போராட்டம், பட்டாம்பூச்சி பிடிக்க முயற்ச்சி, ஆல மர விழுதில் ஊஞ்சல். மலை அடிவாரம், விஜய்யின் வயக்காடு, அங்கு வீசிய காற்று, என் காதில் சுருதி மீட்டியது, சுகமான ராகங்கள்.

மாலை டவுனுக்கு சென்று சிவகாசி பட்டாசு வாங்க எத்தனித்தோம். பட்டாசுக்கடையிலும் விஜயின் ஆதிக்கம் தான். வைரியை சுற்றி 8 பட்டியும் அவனுக்கு தான் சொந்தம் என்றார்ப்போல், அங்கும் அவனுக்கு உறவினர் கைகொடுத்து கடைக்குள் அவனை புகுத்தினார். சுமார், 30 நிமிடம், நமது பயாஸ் எஞ்சிணியர் பட்டையை கிளப்பினார் - அவுட்புட், ஒரு பெட்டி நிறைய வெடி. சரக்கு நம்ம ஊரு வண்டியில் ஏற்றப்பட்டது. வண்டி, விருமாண்டி 'உன்ன விட ,.... ' ஸ்டைலில் காற்றை கிளித்து கொன்டு ராஜா ஊரை நோக்கி சென்றது.
அன்று சாரல் அடித்ததால், நிலவு முகிலனுக்கு பின்னால், முகம் மறைத்துக் கொன்டது. அவன் வீட்டை கன்டுபிடிப்பது மிக சுலபம் என்று விஜய் கூறியதை நான் பற்றிக்கொள்ளவில்லை. வானவேடிக்கைகள் வானில் வண்ணக்கோலங்கள் வரைந்துகொன்டு இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவை எல்லாம் ஒரே இடத்தில் இருந்து ஊற்று போல
புறப்பட்டு கொன்டிருந்தது. விஜய் - 'அது தான் இந்த எட்டுபட்டி ராசா வின் வீடு' . இன்னும் ஒரு அழகான குடும்பம். எல்லோரும் மகிழ்சியுடன் பன்டிகை கொன்டாடிகொன்டிருந்தனர். அன்றிரவு அங்கு கூட்டாஞோரு. அது எனது கிராமத்தை ஞாபகமூட்டியது. பின்னர், விடைபெற்றுக்கொன்டு வீடு திரும்பினோம். அன்று இரவு நீளமாய் இருக்க வேன்டினேன். வீட்டில், நன்பர்கள், விஜய் அப்பா, விஜய், எல்லாரும் கூடி பட்டாசு கொளுத்தினோம்.
தீபாவளி விடிந்தது, என்னை தேய்த்து குளித்து, புது உடை அனிந்தோம். எனக்கு விஜய் அம்மா அப்பா புடு வேஷ்டி ச்ட்டை கொடுத்தார்கள். மல்லு வேட்டி மைனராக வெளியே வந்தேன். அது ஒரு இனிய தீபாவளி நன்நாளாக அமைந்தது. எல்லாரிடமும் விடை பெற்றுக்கொன்டு, கிளம்பினேன். பிரயானம் என்னை சுகமாக பெங்களூர் கொன்டு சேர்த்தது.
303 வந்து சேரும் போது, மனதில் ஒரு மகிழ்சி, இந்த தீபாவளி எப்பவும் போல TV முன்னால் இல்லாமல் இருந்தது.

Tuesday, November 22, 2005

Tamil Dictionary upgrade

தமிழ் அகராதியில் வெர்சனிங் அரம்பிக்க கோரி எனது மணு.
அன்பார்ந்த தமிழ்ச்சங்க பெரியோர்களே,
தங்கள் எல்லோருக்கும் எனது முதற்க்க்ண் வணக்கம். உலகில் பழம்பெரும் மொழிகளில் ஒன்றானது எனது தாய் மொழியாம் தமிழ். இதுக்கு பின்னாடி வந்த மொழி எல்லாமே அவங்க அவங்க அகராதியை சரியான டைம் க்கு சரி செய்து அதில் வார்தைகளை கூட்டிகொள்கிறார்கள். நம்ம தமிழ் அகராதி மட்டும் அப்படியே இருக்கே ஏன்?
கடைக்கு போய் பழம் வாங்கும் போது ஆப்பிள் குடு, ஆரஞ்சு குடுன்னு தான் கேட்டு வாங்க வேன்டியிருக்கு. இதுக்கு எல்லாத்துக்கும் தமிழ்ல வார்த்தை இருக்கலாம், ஆனா, அது யாருக்கும் போய் சேரவில்லை. ஆது ஏன்? அதே சமயம், இந்த பேச்சுவார்த்தை சொற்க்கள் மட்டும் ஏனோ தெரியவில்லை, மிக பிரபலமாக இருக்குது. அதாவது, குண்டக்க மண்டக்க, கொக்கா மொக்கா, கலீஜ் பார்டி மாமு, இன்னும் பல.


to be continued